ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மன்னரின் மாபெரும் இறுதிச் சடங்கு!

மறைந்த, தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளன.

எண்பத்தொன்பது வயதான தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த 70 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டின் மன்னராக இருந்தார்.

ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மன்னரின் மாபெரும் இறுதிச் சடங்கு!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடலநலக்குறைவு காரணமாக காலமானார். இதன்பின்னர் ஓராண்டு காலம் அவரது இரங்கல் நிகழ்ச்சிகள் நடந்தன.

கடந்த ஓராண்டு காலமாக நடந்த இந்த நிகழ்வுகளினால் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு வந்தது. இன்று தலைநகர் பாங்கொக்கில் உள்ள அரண்மணையில் இறுதிச் சடங்கு நடந்தது.

ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மன்னரின் மாபெரும் இறுதிச் சடங்கு!

புத்த குருமார்கள் மன்னர் பூமிபாலின் உடலுக்கு சடங்குகள் செய்தனர். இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களடோடு ராணுவ தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

59f2352c319ff-IBCTAMILஇதன் பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மன்னர் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சனம் லுவாங் என்ற இடத்தில் தங்கத்தால் ஆன நினைவு மண்டபம் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மன்னரின் மாபெரும் இறுதிச் சடங்கு!