“எங்களுக்கு பிடிக்காத எம்பி, எம்.எல்.ஏவை நீக்கிடுவீங்களா?” – ஆர்த்தி

படம் தீபாவளிக்கு வெளியானபோது பரவாயில்லை என்று ஒரு சிலர் கொஞ்சம் சலித்துக்கொண்டனர். ஆனால் அதற்கு மறுநாள் தான் மெர்சலுக்கு உண்மையான தீபாவளி ஆரம்பமானது. அந்த வெடியை பற்ற வைத்த பெருமை தமிழக பாஜக தலைவர்களை தான் சாரும் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் பற்ற வைத்த ராக்கெட் வெடியை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து படத்திற்கு நல்ல வசூலை பெற்று தந்தனர்.

மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலர் மெர்சல் குறித்து தங்களது ஆதரவை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஆர்த்தியும் தன் பங்குக்கு ‘மெர்சல்’ பிரச்சனை குறித்து தனது டுவிட்டரில் பாஜகவினர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்

அவர் கூறியதாவது: 2.5 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் உங்களுக்கு பிடிக்காத காட்சியை நீக்க சொல்லி நீக்கவும் வைக்கிறீங்க. ஆனால் ஐந்து வருடம் ஆளுகிற எங்களுக்கு பிடிக்காத எம்பியும், எம்.எல்.ஏவும் நீக்க சொன்ன எங்களை தேச விரோத சக்திகள் என்று சொல்லுறீங்க, என்னங்க உங்க நியாயம் என்று ஆர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

NTLRG_20160815085051465390