கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க அங்கம் வகித்தது. அப்போது தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தி.மு.கவின் ஆ.ராசா முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில், கடந்த 2008 -ம் ஆண்டு 2 ஜி அலைக்கற்றை விற்பனை செய்ய உத்தரவிட்டார் எனவும், இதன் காரணமாக ரூ. 1.76 லட்சம் கோடி அளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. மேலும் தி.மு.க அடுத்தடுத்த தேர்தலில் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக இந்த வழக்கு அமைந்தது.
இந்த நிலையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இறுதி தீர்ப்புக்கான தேதி நாளை வெளியிடப்படும் என்று டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தி.மு.கவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போன்ற முக்கிய நபர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் டெல்லி சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மேலும் நீதிபதி ஓ.பி.ஷெய்னி இந்த வழக்கை மிக கவனத்துடன் விசாரித்து வருகிறார். சிஐஜி அறிக்கையின் அடிப்படையில் இந்த 2ஜி முறைகேடு என்பது பூதாகரமானது குறிப்பிடத்தக்கது. நாளை நிச்சயம் தீர்ப்பு தேதி வெளியாகி விடும் என்ற குஷியில் இருக்கிறாராம் எடப்பாடி.






