150 வருடம் பழமையான திக்வளவ்வ கந்த விடுதியின் மர்மங்கள்!

திக்வளவ்வ கந்த எனும் அழைக்கப்படும் இந்த விடுதி கம்பஹா யக்கள கிரிந்திவிள பிரதேசத்தில் காணப்படுகின்றது.

இந்த திக்வளவ்வ கந்த எனும் விடுதியானது சுமார் 150 வருடங்களுக்கு முன்பு வெள்ளையர்களால் கட்டபட்டதாகவும் அதற்கு பின்னர் சிங்களவரான ஓபேசேகர என்பருக்கு உரிமையானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

150 வருடம் பழமையான திக்வளவ்வ கந்த விடுதியின் மர்மங்கள்

திக்வளவ்வ கந்த உரிமையாளருக்கு வயது 80 எனினும் 330 ஏக்கர் பரப்பளவில் தென்னதோட்டங்களும் சுமார் இரண்டாயிரம் பேர் பணிபுரிந்து வருகின்ற கோழிப்பண்ணை ஒன்றும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிலவருடங்களுக்கு முன்பு இந்த திக்வளவ்வ கந்த வீடுதியை சுற்றி சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு குடில்கள் காணப்பட்டதாகவும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு அப்பிரதேச மக்கள் அந்த திக்வளவ்வ கந்த எனும் வீடுதிக்கு சென்றுவந்தாகவும் குறிப்பிடப்படுகிறது.

எனினும் 30வருடங்களுக்கு பிறகு அந்த திக்வளவ்வ கந்த வீடுதிக்கு செல்லுவதற்கு தடை வீதிக்கபட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
150 வருடம் பழமையான திக்வளவ்வ கந்த விடுதியின் மர்மங்கள்

திக்வளவ்வ கந்த வீடுதியில் மாத்திரம் சுமார் 100அறைகள் காணப்படுவதாகவும் அதன் உரிமையாளருக்கு சொந்த ஹேலிகப்டர் ஒன்று உள்ளதாகவும் குறிப்பிட்ப்படுகிறது.

சில சமுகவலைதளங்களில் திக்வளவ்வ கந்த விடுதியில் பேய்கள் நடமாட்டம்  காணப்படுவதாக தகவல்கள் வெளியிட்டப்பட்டது.

இந்த தகவல்களுக்கு அடிப்படையில் நாம் அந்த பிரதேசத்திற்கு சென்று இருந்து போது கிரிந்திவில பிரதேச மக்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது

பேய்கள் நடமாற்றம் ஏதும் இல்லை. இந்த விடுதியை எவரும் போய் பார்வையிடவோ அல்லது எவரும் சந்திக்கவோ முடியாது அம் மக்கள கூறிப்பிட்டனர்.

150 வருடம் பழமையான திக்வளவ்வ கந்த விடுதியின் மர்மங்கள்

ஆனால் அந்த திக்வளவ்வ கந்த விடுதிக்கு பச்சைபூசி பலவருடங்கள் கடந்துள்ளது ஆனால் இந்த திக்வளவ்வ கந்த விடுதிக்குள் என்ன நடக்கிறது என்பது ஒரு மர்மமாகவே இருக்கிறது.

ஆனால் இந்த திக்வளவ்வ கந்த விடுதி ஒரு பேய்கள் விடுதி என் நம்பி பலர் இதனை பார்வையிட செல்கின்ற போதும் அந்த விடுதியினை சுமார் 500மீற்றர் தொலைவில் இருந்தே பார்வையிடம் முடியும்

எனவே இந்த திக்வளவ்வ கந்த விடுதியின் உரிமையாளரான ஓபேசேகரவை   சந்திக்க வேண்டுமானால் ஜனாதிபதி, மற்றும் பிரதமர், மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் ஊடாகவே சநத்திக்க முடியுமென கூறும் பிரதேசமக்கள் இதுவரை எவரும் அவரை சந்தித்தது இல்லை என தெரிவிக்கின்றனர்.