ஜனா­தி­ப­தி­யுடன் நாளை சைட்டம் இறு­தித்­தீர்­வுக்­கான பேச்சு!

சைட்டம் நிறு­வனம் தொடர்­பாக அர­சாங்­கத்தின் இறுதித் தீர்வு குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­காக தனியார் மருத்­து­வக்­கல்­லூரியுடன் தொடர்புடைய சகல தரப்­பு­களும் நாளை 23 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஜனா­தி­ப­தியால் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­திற்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அங்கு சைட்டம் தொடர்­பாக இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­படும் எனவும் தெரி­ய­வ­ரு­கி­றது. சைட்டம் நிறு­வனம் தொடர்­பாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு இப்­பேச்­சு­வார்த்­தை­யின்­போது ஜனா­தி­ப­தி­யிடம் தமது கருத்­து­களை தெரி­விக்­க­வுள்­ள­துடன் , அங்கு ஜனா­தி­ப­தியின் இணக்­கப்­பாட்­டுடன் இறுதி முடிவும் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

article_1488776634-sait_மாலபேசைட்டம் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவம் தொடர்­பாக பிரச்­சி­னைகள் இருப்­பதால் அந்த நிறு­வ­னத்தின் தற்­போ­தைய முகா­மைத்­து­வத்­தி­ட­மி­ருந்து பொறுப்­பேற்று அரச சார்­பின்றி இலா­ப­நோக்­கற்ற பங்­கு­தா­ரர்­க­ளைக்­கொண்ட ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உயர் கல்வி நிறு­வ­ன­மொன்­றிடம் ஒன்­றி­ணைக்க  சிபா­ரிசு செய்­ய­வுள்­ள­தாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்­துள்ளார். இதற்கும் மேல­தி­க­மாக இந்த கல்வி நிறு­வ­னத்தில் தரம் பேணப்­படும்.

ஜனா­தி­பதி தலை­மை­யி­லான இப்­பேச்­சு­வார்­தையில் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலை­மை­யி­லான குழுவின் உறுப்­பி­னர்­க­ளான சட்­டமா அதிபர், உயர் கல்வி அமைச்சின் செய­லாளர், பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்குழுவின் தலைவர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொள்வர். மற்றும் சுகாதார அமைச்சர் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஆகியோர்   கலந்து கொள்ளவுள்ளனர்.