ஸ்ரீலங்காவில் கிடைக்கபெறும் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபர தகவலின் படி கடந்த வருடம் (2016) மொத்தமாக 2 ஆயிரத்து 36 பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் ஆயிரத்து 686ம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
16 வயதிற்குட்பட்ட யுவதிகள் சுய விருப்பத்துடன் ஆணுடன் உறவு கொண்டாலும் பாலியல் துஷ்பிரயோகம் என்றே கருதப்படும்.
இவர்களில் ஆயிரத்து 394 யுவதிகள் அவர்களின் சம்மதத்தினுடையே ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர்.
எனவே உண்மையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானோரின் எண்ணிக்கை 292 ஆகும்.
இதன் படி கடந்த வருடத்தில் உண்மையாக மொத்தமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களின் எண்ணிக்கை 642 ஆகும்.
எனவே சதவீத பகுப்பாய்வின் 65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடந்தவை என்று தெரிவிக்கப்படுகின்றது.






