பிரிட்டன் விமானம் ஒன்றில் பயணித்த பெண்களுக்கு நேர்ந்த கதி!

இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த குடும்பம் ஒன்றுக்கு மூட்டைப் பூச்சிகள் சரமாரியான தாக்குதலினைக் கொடுத்தமையினால் குறித்த குடும்பத்திடம் குறித்த விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

பிரிட்டன் விமானம் ஒன்றில் பயணித்த பெண்களுக்கு நேர்ந்த கதி!

இதுகுறித்து தெரியவருவதாவது,

ஹெதர் சிஸிலாகி என்ற பெண்மணி தனது ஏழு வயது மகளுடன் வேங்கூவரிலிருந்து லண்டனுக்கு குறித்த விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்றில் பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் இருவரும் இருக்கையில் அமர்ந்திருந்த போது, முன்னால் இருக்கும் இருக்கையிலிருந்து மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்து செல்வதை அவதானித்து விமான பணிப்பெண்ணிடம் முறைப்பாடு செய்தனர்.

பிரிட்டன் விமானம் ஒன்றில் பயணித்த பெண்களுக்கு நேர்ந்த கதி!

ஆனால் குறித்த விமானத்தில் போதிய இடம் இல்லாததால் மகளையும் தாயாரையும் வேறு இருக்கைகளுக்கு மாற்ற முடியவில்லை. அடுத்த நாள் சுலோவேனியா சென்றடைந்த இருவருக்கும் உடல் முழுதும் தடித்துப்போய் இருந்தது.

தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை தெரிவிக்க விமான நிறுவனத்தை தொடர்புகொண்டபோதும் அது பலனளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, சிஸிலாகி தனது மகளின் கால்களில் பூச்சி கடித்த இடங்களைப் படமெடுத்து ருவிட்டரில் முற்படுத்தினார்.

பின்னர் அவர்களைத் தொடர்பு கொண்ட குறித்த பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம், மன்னிப்புக் கோரியுள்ளதோடு அவர்கள் இருவரும் திரும்பி வரத் தேவையான விமானப் பயணச் சீட்டுகளை வழங்கியுள்ளது.

பிரிட்டன் விமானம் ஒன்றில் பயணித்த பெண்களுக்கு நேர்ந்த கதி!