சேனைக் காணியில் பயிரிடப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா சிக்கியது!

கொஸ்­லந்‍தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஹாமி­னா­கந்த வனப்­ப­கு­தியில் நேற்று மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சுற்­றி­வ­ளைப்பின் போது சட்­ட­ வி­ரோ­த­மாக அரை ஏக்கர் சேனை­யொன்றில் பயி­ரி­டப்­பட்­டி­ருந்த சுமார் ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய கஞ்­சாவை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் சந்­தேக நப­­ரையும் கைது செய்­துள்­ள­தாக கொஸ்­லந்தை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

kanja-payirஇந்த கஞ்சா சேனையில் நன்கு வளர்ந்­தி­ருந்த சுமார் 9 அடி உய­ர­மான 5 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான கஞ்சா செடி­களை கைப்­பற்­றி­ய­தோடு அதன்­பின்னர் அவற்றை அழிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக கொஸ்­லந்தை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இதன்­போது கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் பல­ஹ­ருவ, அளுத்­வெல பிர­தே­சத்தைச் சேர்ந்த 48 வய­தான ஒரு­வ­ரென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தேக நபர் இன்­றைய தினம் பண்­டா­ர­வளை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நிலையில் கொஸ்­லந்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் தயா­சிறி தலை­மையில் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெற்று ந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுனில் தயாசிறி தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.