சிறையில் உள்­ள­வர்கள் ஆயுதம் ஏந்­திய பயங்­க­ர­வா­திகள்! – சரத் பொன்­சேகா

சிறையில் உள்ள விடு­தலைப் புலிகள் எவரும் அர­சியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்­திய பயங்­க­ர­வா­தி­களை எவ்­வாறு அர­சியல் கைதி­க­ளாக கரு­த­மு­டியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சேகா, விடு­தலைப் புலி­களை ஒரு­போதும் விடு­தலை செய்யப் போவ­தில்லை எனவும் குறிப்­பிட்டார்.

sarath-fonseka2தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்­சி­யாக போராட்­டங்கள் இடம்­பெற்று வரும் நிலையில் இந்த விவ­காரம் தொடர்பில் கருத்து கூறும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், தமிழ் அர­சியல் கைதி­களை சிறையில் அடைத்­துள்­ள­தாக கூறு­வது பொய்­யான கருத்­தாகும். இலங்­கையில் தமிழ் அர­சியல் கைதிகள் என யாரும் இல்லை. சிறையில் உள்­ள­வர்கள் விடு­தலைப் புலிகள். அவர்­களை எவ்­வாறு அர­சியல் கைதிகள் என சித்­தி­ரிக்க முடியும்.

ஆயுதம் ஏந்தி நாட்டில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­திய பயங்­க­ர­வா­திகள் எவ்­வாறு அர­சி­யலில் ஈடு­பட முடியும்? ஆயுதம் ஏந்­திய அர­சியல் ஒன்று இலங்­கையில் நடக்­க­வில்லை. இன்று சிறையில் உள்­ள­வர்கள் அனை­வரும் சட்­டத்­தினால் தண்­டிக்­கப்­பட வேண்­டிய நபர்கள். அவர்­களை விடு­தலை செய்யக் கூறி வடக்கில் சிலர் போராட்டம் நடத்தி வரு­கின்­றனர்.

குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். ஆனால் புலி­களை விடு­தலை செய்ய முடி­யாது. புலி­களை விடு­தலை செய்­வ­தனால் மீண்டும் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் சூழலை உரு­வாக்­கிக்­கொ­டுக்க முடி­யாது. இன்று நாட்டில் அமை­தி­யான சூழல் நிகழ்ந்து வரு­கின்­றது.

நீண்­ட­கால யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­ததால் நாட்டில் சகல மக்­களும் வாழக்­கூ­டிய சூழல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கில் தமிழ் மக்கள் நிம்­ம­தி­யாக வாழ­மு­டி­கின்­றது. ஆனால் இந்த யுத்­தத்தை வைத்து அர­சியல் நடத்தும் நபர்­க­ளுக்கு மீண்டும் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டிய தேவை ஒன்று உள்­ளது.

தெற்­கிலும் வடக்­கிலும் ஒரு சிலர் நாட்டில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த விரும்­பு­கின்­றனர். அதற்­காக விடு­தலைப் புலி­களை விடு­தலை செய்­யக்­கோரி ஆர்ப்­பாட்டம் நடத்­து­கின்­றனர்.

எக்­கா­ரணம் கொண்டும் சிறையில் உள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய முடியாது. அவர்களை சட்ட ரீதியாக அணுக வேண்டும். விடுதலைப் புலிகள் விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றார்.