முன்னாள் முன்னணி நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் மிகவும் ஆக்ட்டிவாக செயல்பட்டுவருபவர். தன்னை பற்றி வரும் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தைரியமாக பதில் கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பு தன்னுடைய இளமைக்கால புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படமானது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், குஷ்புவின் அழகை அழகழகான கவிதையாய் செதுக்கத் துவங்கினர். மேலும், நீங்கள் ஏன் உலக அழகி போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை, உலகழகி கிரீடமே தவறவிட்ட ஓரு பேரழகி நீங்கள் என வாழ்த்துக்களையும் கேள்விகளையும் தொடுத்தனர்.
இவை, குஷ்புவின் ரசிகர்கள் அவரின் மீது கொண்ட உண்மையான அன்பின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.











