ஓவியா, எப்பொழுது லைவ் சாட் செய்வீர்கள்? ரசிகர்கள்

நடிகை ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து பல மன அழுத்தத்திற்கு பிறகு வெளியேறினார். வெளியேறிய பிறகு பல நாட்கள் கழித்து ஓவியா ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் நன்றாக இருப்பதாக கூறினார். மேலும் மக்கள் அவர் மீது வைத்த அன்பிற்கு நன்றி கூறினார். மேலும் சிறிது நாட்கள் கழித்து ஒரு ட்வீட் வெளியிட்டார் அதில், பிக் பாஸ் விதிமுறைகளால் உங்களுடன் நேரடியாக பேச முடியவில்லை, 100 நாட்கள் முடியட்டும் லைவ்சாட் செய்வோம் என்று அந்த ட்வீட் மூலம் அறிவித்தார் ஓவியா.

Oviya_green gown-compressed_0

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஓவியா கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகிறார். மேலும் விளம்பர படங்கள், படங்களில் பிசியாகிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களோ 100 நாட்கள் முடிந்துவிட்டதே சொன்னபடி தலைவி ஏன் லைவ் சாட் செய்யவில்லை என்று கேட்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஓவியா, எப்பொழுது லைவ் சாட் செய்வீர்கள்?