கடவுளாக வழிபடும் சிவன் யார்?? – வீடியோ

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி  தமிழக ஆய்வாளர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வருபவர்.

siva

தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டு ஆய்வு செய்து வருபவர்.

இவர் தற்போது தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில்,நாம் கடவுளாக வழிபடும் சிவன் பாண்டிய மன்னர்களின் முதல் மன்னர் என குறிபிட்டுள்ளார்..அது மட்டுமின்றி தமிழர்களின் நீர் வழி போக்குவரத்தை பற்றி ஆதாரத்துடன் கூறியுள்ளார்..

அது பற்றி சில,

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு..ஆம்.அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்,

தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன.

இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான்.

இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்..

மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.

பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான்.