யாழ்ப்பாணம் உட்பட்ட பல இடங்களில் ரவுடிகள்போல் செயற்படும் இ.போ.ச சாரதிகள்

அளவெட்டியிலிருந்து மாகியப்பிட்டி சந்தியூடாக யாழ் சென்ற இ.போ.ச பஸ்ஸினால் இன்று (10) காலை கந்தரோடை மற்றும் சுன்னாகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

GE 0127 இலக்கமுடைய பஸ்ஸானது அளவெட்டிப்பகுதியிலிருந்து சுன்னாகத்தினைகாலை 7.30 இற்கு சென்றடைந்தது.
625.0.560.350.160.300.053.800.668.160.90-1-7
எவருக்கும் முந்திச்செல்ல இடம்விடாது காவாலித்தனமாக பஸ்ஸினைச் செலுத்தியமையாலேயே பரபரப்பு ஏற்பட்டது. ஒடுங்கிய இவ்வீதியில் பயணிகளை நிறுத்தி ஏற்றும்போதுகூட ஏனைய சாரதிகளக்கு இடம்கொடாது நடுவீதியில் வைத்து ஏற்றப்பட்டது இதனால் பல அரச உத்தியோகத்தர்கள் நேரத்திற்கு கடமைக்கு செல்லமுடியாது நீண்டநேரம் பஸ்ஸிற்கு பின்னால் செல்லவேண்டியநிலை ஏற்பட்டது. முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார்சைக்கிளில் சென்ற ஒருவர் வடிகாலுக்குள் வீழ்ந்தது காயமடைந்துள்ளார்.

முக்கியமாக பஸ் சாரதி சுன்னாகம் பஸ் நிலையத்திற்கு திரும்பும்பும்போதும், பல கிலோமீற்றர் தூரத்திற்கும் முந்திச்செல்லவேண்டாம் என்கின்ற பக்க சமிக்கை போடவில்லை. இச்சாரதி வழமையாகவே இவ்வாறுதான் செயற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

கடந்தகாலங்களில் அரசியல்ரீதியான நியமனங்களின்மூலம் கடந்தகாலங்களில் வேலைபெற்ற சில தகுதியில்ராத இவ்வாறான சாரதிகளால் யாழ் மக்கள் தொடர்ந்தும் துன்பப்படப்போவது உறுதி