இந்தியாவே அவளைப் பார்த்து பயப்படும்கூறியதன் காரணம் என்ன?

சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அவள்’ படத்தை இந்தியாவே பார்த்து பயப்படும் என்று, நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். சித்தார்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அவள்’. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வந்திருக்கிறார் சித்தார்த். அப்படம் பற்றிய எந்தவொரு தகவலுமே வெளியிடாமல் இருந்தார்.
21-1453376333-siddharth--s-a-600
தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறும் நிலையில், இப்படத்துக்கு ‘அவள்’ என பெயரிட்டு இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் இப்படம் தயாராகியுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படத்தை மிலிண்ட் ராவ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் சித்தார்த் பேசும்போது, ‘அதுல் குல்கர்னியுடன் 12 வருடத்திற்கு பிறகு நடித்தது மிகவும் சந்தோஷம். இப்படத்தின் இயக்குனரும் நானும் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினோம். அந்த நட்பின் வளர்ச்சி தான் தற்போது ‘அவள்’ படமாக வந்திருக்கிறது.
இந்த படத்தை நானும் சேர்ந்து தயாரித்திருக்கிறேன். ஹாலிவுட் படங்கள் பல, மக்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும். ஆனால், இந்தியப் படங்கள் அந்தளவிற்கு இல்லை. இந்தியாவே பயப்படும் அளவிற்கு ஒருபடம் எடுக்க நினைத்தேன். அதுதான் ‘அவள்’ படமாக உருவாக்கி இருக்கிறேன். நிச்சயம் அனைவரையும் பயமுறுத்தும் படமாக இருக்கும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருக்கிறோம்’ என்றார்.