பெங்களூரிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் தனது காதலியை சந்திக்க சென்றபோது மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ஒடிசாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரனாய் மிஸ்ரா (வயது 28). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பேகூரிலுள்ள நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த பார்ட்டியில் இவர் பங்கேற்றுள்ளார்.
இதன்பிறகு, திங்கள்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில், தான் தங்கியிருந்த தாவரகெரே பகுதிக்கு வந்தார்.
அப்போது மகளீர் விடுதியில் தங்கியிருந்த தனது காதலியை போனில் அழைத்து இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் உன்னை பார்க்க வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.
சொல்லிவிட்டு போகும் வழியில், ஒரு ஒரு சாக்லேட் பேக்டரியை நெருங்கிய பொழுது மர்ம நபர்கள் சூழ்ந்து கொண்டு சரிந்து விழும் வரை கத்தியால் குத்தியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கு வழியில் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பொழுது, அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர் அந்த வழியாக வரும் தகவல் காதலிக்கு மட்டுமே தெரியும், மேலும் பணம், மொபைல் உட்பட எதுவும் திருட்டு போகவில்லை.
இதனால் வழக்கை வேறு கோணத்தில் ஆராய்ந்து வருகின்றனர் போலீசார்.







