திருப்பதியில் ஜனாதிபதி மைத்திரியை தொடர்ந்த ஆளில்லா விமானம்!

இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு சென்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆளில்லா விமானம் வேவுபார்த்ததாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

59d9d62cea123-IBCTAMIL

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற சுப்ரபாத பூசையில்  பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன திருமலைக்கு சென்ற சில மணிநேரத்தில் அவர் தங்கியிருந்த பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து 500 மீற்றர்  தொலைவில்  ஆளில்லா விமானம் ஒன்று பறந்து விழுந்துள்ளது.
இதனால் சிறிநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் விழுந்ததை கண்ட  ஆந்திர பொலிஸார் குறித்த விமானத்தை மீட்டுள்ளனர்.

எனினும் இறுதியில் குறித்த ஆளில்லா விமானம் அங்கு பெங்களுரில் இருந்து வந்த  என்.டி.ஆர்.எப் நிபுணர்கள் பூங்கா அமைப்பதற்கான இடங்களை பார்வையிட அனுப்பியது என தெரியவந்தது.