தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்தது.

09-1496983132-28-1480320537-apple-iphone-8-2
பீஜிங்:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் பேட்டரியில் ஏற்பட்ட பிழை போனினை பாதியாக பிளக்க வைத்த சம்பவங்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அரங்கேறி வந்தது. இந்நிலையில் புதிய ஐபோன்களில் இதே பிரச்சனை சீனாவிலும் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக தாய்வான் மற்றும் ஜப்பான் நாடுகளில் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் பிழை ஏற்பட்ட சம்பவம் குறித்து முறையான ஆப்பிள் நிறுவனம் விசாரணையை துநங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

சீனாவை சேர்ந்த வலைத்தளத்தில் லியூ என்ற வாடிக்கையாளர் தனது ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்து கொண்டதாக அக்டோபர் 5-ம் தேதி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன் வெடித்ததற்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில் தனது ஐபோனினை உரிமையாளர் தான் வாங்கிய இடத்திலேயே திரும்ப வழங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்து கொள்ளும் சம்பவங்களை விசாரணை செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட போதும், இது குறித்து மற்ற தகவல்களை வழங்வில்லை. தற்சமயம் வரை ஐபோன் 8 சீரிஸ் முன்பதிவுகள் முந்தைய ஐபோன்களை விட குறைவாகவே காணப்படுகிறது.

எனினும் பெரும்பாலான ஐபோன் வாடிக்கையாளர்கள் பத்தாவது ஆண்டு ஐபோன் பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X வாங்க காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் X விற்பனை நவம்பர் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்தியாவில் 64 ஜிபி ஐபோன் X விலை ரூ.89,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.