மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், அவர்களது ஸ்ரீலங்கா கடற்படை சிறைப்பிடிப்பது தொடர் இடம்பெறும் சம்பவம்.
அந்தவகையில் 2015 முதல் கடந்த செப்டம்பர் வரை தமிழக மீனவர்களின் 182 படகுகள் ஸ்ரீலங்கா கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகள், ஒன்றுடன் ஒன்று மோதி நீரில் மூழ்கியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2015ல் பறிமுதல் செய்த 42 படகுகளை மட்டும் ஸ்ரீலங்க அரசு விடுவித்தது.
இரண்டு கட்டமாக ஸ்ரீலங்கா சென்ற தமிழக மீனவர்கள், இதுவரை 12 படகுகளை மட்டுமே மீட்டு வந்துள்ளனர்.
மூன்றாம் கட்டமாக நேற்று முன்தினம் மீனவர் குழு ஸ்ரீலங்கா சென்றுள்ளது.
படகுகள் கிடைத்தால்தான் மீன்பிடித்தொழில் செய்ய முடியும் என்ற நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
உரிய நேரத்தில் படகுகளை விடுவிக்கும் நிலை இல்லாததால்தான் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் புலம்புகின்றனர்.
இலங்கையிலுள்ள அனைத்துப் படகுகளையும் மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கடற்படை சிறைபிடித்த 182 படகு மற்றும் மீன்பிடி சாதனங்களின் மதிப்பு ரூ.50 கோடிக்கும் மேல்.
இதில் 50க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளதால் மீனவர்களுக்கு ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என படகுகளை இழந்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.






