யாழ். இந்துக்கல்லூரி 94 – 97 பிரிவில் கற்று உயிர் நீத்த மாணவர்களின் ஞாபகார்த்தமாக இரத்த தானம்!!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 1994 சாதாரண தரம், 1997 உயர்தரப் பிரிவுகளில் கற்று உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக அந்தப் பிரிவைச் சேர்ந்த பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் மாற்று ஆற்றலுடையவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், இரத்த தான நிகழ்வும் நாளை 7 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி, தருமபுரத்தில் அமைந்துள்ள சைவநெறிக் கூட பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
Blood-Donation-720x450
இந்நிகழ்வுக்கு யாழ். இந்துக்கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் மருத்துவர் வை.யோகேஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மானிடம் அறக்கட்டளையினால் கிளிநொச்சியில் சைவநெறிக்கூடம் எனப்படும் மாற்று ஆற்றலுடையோருக்கான பயிற்சி நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பயிற்சி கூடத்தின் விழ்ப்புலனுற்றவர்களுக்கான பிரைலி பயிற்சிக் கூடத்துக்கான பிரைலி தட்டச்சு இயந்திரங்களும், அவர்களுக்கான கற்றல் உபகரணங்களுமே யாழ். இந்துக்கல்லூரி 94 – 97 பிரிவு பழைய மாணவர்களினால் வழங்கப்படவுள்ளது.
அதே வேளை, யாழ். இந்துக்கல்லூரி 94 – 97 பிரிவில் கற்று உயிர் நீத்த மாணவர்களின் ஞாபகார்த்தமாக இரத்த தானமும் இடம்பெறவுள்ளது.