வடக்கு மாகாண ஆளு­ந­ரின் பதிலுக்கு காத்திருக்கும் வித்­தி­யா­வின் தாய்!!

கூட்­டு­வன்­பு­ணர்­வின் பின்­னர் படு­கொலை செய்­யப்­பட்ட மாணவி வித்­தி­யா­வின் குடும்­பத்­துக்கு, வவு­னி­யா­வில் வழங்­கப்­பட்ட வீடு, அத­னு­டன் இணைந்த காணிக்­கு­ரிய உரி­மைப் பத்­தி­ரங்­கள் ஒன்­றரை வரு­டங்­க­ளா­கி­யும் அர­சால் வழங்­கப்­ப­ட­வில்லை.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (11)

இது தொடர்­பில் வித்­தி­யா­வின் தாயா­ரான சிவ­லோ­க­நா­தன் சரஸ்­வதி தெரி­வித்­த­தா­வது:

மக­ளின் படு­கொ­லைக்­குப் பின்­னர் வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­திக்க ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

அங்கு சென்று அரச தலை­வ­ரைச் சந்­தித்­தேன். அதன்­போது எமக்கு வீடு ஒன்­றைக் கட்­டித் தரு­வ­தாக அரச தலை­வர் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.

அதனை வவு­னி­யா­வில் தரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார். அதன்­படி வவு­னி­யா­வில் சுமார் 2 பரப்­புக் காணி­யில் வீடு ஒன்று அமைத்­துத் தரப்­பட்­டது. எனி­னும் சுமார் ஒன்­றரை வரு­டங்­கள் கடந்­தும் அந்­தக் காணிக்­கு­ரிய உறு­தியோ வேறு ஆவ­ணமோ இது­வரை எமக்­குத் தர­வில்லை.

இது தொடர்­பில் காணி அமைச்­சுக்­குக் கடி­தங்­கள் எழு­திச் சலித்­து­விட்­டேன். இன்­னும் பதி­லில்லை.

மக­ளைப் படு­கொலை செய்­த­வர்­கள் 7 பேருக்­குத் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில் தனக்­குத் தரப்­பட்ட வீட்­டுக்­கான உறு­திப் பத்­தி­ரங்­கள் கிடைக்­காமை தொடர்­பில் வடக்கு மாகாண ஆளு­ந­ருக்­குக் கடி­தம் மூல­மாக முறை­யிட்டு உரிய தீர்­வைத் தர நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு 2 வாரங்­க­ளுக்கு முன்­னர் கோரி­யுள்­ளேன். அவ­ரின் பதி­லுக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றேன்” என்­றார்.