தமிழரிடம் பிச்சை கேட்கும் அவுஸ்திரேலிய அரசு: கேடு கெட்ட விதம் இதுதான் !

அவுஸ்திரேலியாவில் உள்ள மனுஸ் தீவில், ஈழத் தமிழர் ஒருவரை அவுஸ்திரேலிய அரசு அடைத்துவைத்தது. ஏற்கனவே இலங்கை போரில் மன நிலை பாதிக்கப்பட்ட இந்த இளைஞரை அங்கே வைத்து கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாது. அவர் அப்பா உயிரிழந்த செய்தியை கூட அவருக்கு தாமதமாகச் சொல்லி. அவரை மேலும் கவலையடைய வைத்துள்ளது அவுஸ்திரேலிய அரசு. இதனால் மனமுடைந்த இந்த தமிழ் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

pathivu-news-300x200

ஈவு இரக்கம் கூட பாராமல் , இறந்து போன நபரின் (மிக மிக வறிய குடும்பத்தாரிடம்) 9,000 ஆயிரம் டாலரை கட்டி உங்கள் மகனின் பிணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளது அவுஸ்திரேலிய அரசு.

என்ன கொடுமை. முழுசாக 1,000 ரூபாவைக் கூட பார்க்காத இந்த வறிய குடும்பத்திடம் போய் 10 லட்சத்தை கேட்டால் எங்கே கொண்டு போய் கொடுப்பது ?  ஒரு நாட்டில் அகதியாக வந்தவர் இறந்தால். ஒரு மரியாதைக்காவது அன் நாடு செலவை பொறுப்பேற்று அவரது உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியும். ஆனால் இந்த பாழப்போன அவுஸ்திரேலிய அரசு செய்யும் கொடுமை. யார் இதனை தட்டிக் கேட்ப்பது ? அவுஸ்திரேலியாவில் பல ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். யாரவது தயவு செய்து , இந்த குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள்.

தமிழ் அகதிகள் கவுன்சிலை இந்த நபரில் தொடர்பு கொண்டு அவுஸ்திரேலிய தமிழர்கள் உதவி செய்யுங்கள். நன்றி.