நீதிமன்றங்களிலே இந்த நிலையா? சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறும் போது தொலைபேசி ஒலிப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.

images (9)

யாழில் உள்ள நீதிமன்றங்களில் தொலைபேசியுடன் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிமன்றுக்கு தொலைபேசியுடன் செல்பவர்கள் அருகில் உள்ள கடை ஒன்றில் தொலைபேசியை ஒப்படைத்துவிட்டு அதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றே உள்ளே செல்கின்றார்கள். இவ்வாறு குறித்த கடையில் ஒப்படைக்கப்படும் தொலைபேசிகளில் பெண்கள் ஒப்படைக்கும் தொலைபேசிகளை குறித்த கடையில் உள்ளவர் ஆராய்ந்து பார்ப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அண்மையிலும்  ஒரு பெண்ணின் தொலைபேசியை குறித்த நபர் ஆராய்ந்து கொண்டிருந்த போது அப் பெண்ணால் பிடிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டார் எனவும் தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பருத்தித்துறை நீதிமன்றுக்கு செல்பவர்கள் தெரிவித்துள்ளனர்.