பாடசாலை மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை.

களுத்துறையில் சர்வதேச சிறுவர் தினத்தன்று சில மாணவர்கள் மது அருந்தி கொண்டாடிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

asdfsafasf2குறித்த மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று சிறுவர் தின கொண்டாட்டங்களும், சித்திரக் கண்காட்சியொன்றும் நடைபெற்றது.

இந்தப் பாடசாலையில் தரம் 12 இல் கல்வி கற்கும் 6 மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் மதுபான விருந்துபசாரமொன்றை நடத்தியுள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் வெற்று மதுபான போத்தல், சோடா போத்தல் என்பனவற்றை மீட்டுள்ளதுடன், இது தொடர்பில் பாடசாலை அதிபர் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் அழைத்து கடுமையாக எச்சரித்து, மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த பாடசாலை மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மதுபானம் அருந்திய மாணவர்களை களுத்துறை வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற போதும் பொலிஸாருக்கு அறிவிக்காது மாணவர்களை பரிசோதனை செய்ய முடியாது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸாரும் பெற்றோரும் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.