அழகான பெண்ணான அவருக்கு வயது 30-ஐ கடந்து கொண்டிருக்கிறது, அதிகம் படித்த அவள் பெரிய வேலையில் இருந்தார்.
அவளுக்கு 24 வயதில் வேலை கிடைத்தது, அப்போது பெற்றோர் மாப்பிள்ளை தேட ஆரம்பிக்க உயர்பதவி கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
இரு வருடங்கள் கழித்து உயர்பதவி கிடைக்க பெற்றோர் தங்கள் மகளுக்கு மின்னல் வேகத்தில் மாப்பிள்ளை பார்த்தார்கள்.
வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கும் நபர் ஒருவரை அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள், பெண்ணை பார்க்க விரும்பிய அவர் தாய்நாட்டுக்கு வந்தார்.
பின்னர், அவளிடம் பேசும் போது நான் வேறு மாதிரியான பாலியல் உறவில் நாட்டம் கொண்டவன். அதனால் உனக்கு தாம்பத்ய வாழ்க்கை ஏமாற்றமாகிவிடும் என அதிர்ச்சி குண்டை போட்டார்.
இதையடுத்து திருமண பேச்சு நின்றது, சில வருடங்கள் தனக்கு திருமணம் வேண்டாம் என அவள் கூறிவிட்டாள்.
28 வயதில் மீண்டும் ஒரு மாப்பிள்ளையை தேடி பிடித்த அப்பெண்ணின் பெற்றோர் கோவிலில் இருவரின் திருமணத்தை எளிமையாக நடத்தினார்கள்.
புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையும் உணவருந்தும் மண்டபத்தை நோக்கி வரும் போது அங்கு ஒரு இளம் பெண் அழுது கொண்டிருந்தாள்.
இது குறித்து புதுப்பெண் விசாரித்த போது அவரின் கணவரும் அழுத கொண்டிருந்த பெண்ணும் நான்கு வருடங்களாக காதலித்து வந்ததும் அவரை ஏமாற்றி பணத்துக்காக இவரை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிர்ச்சியுடன் புதுமாப்பிள்ளையை பிரிந்த அவள் இனி திருமண பேச்சையே எடுக்காதீர்கள் என பெற்றோரிடம் கூறிவிட்டு வேறு நகருக்கு சென்று தனது பணியில் மூழ்கி விட்டாள்.
மூன்று ஆண்டுகள் கழித்து பெற்றோர் வேறு வரன் தொடர்பாக மகளிடம் பேச அவளிடத்தில் சென்று பார்த்த போது அவள் வீட்டின் உள்ளே இருந்து ஒரு இளைஞன் வந்தான்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மகளிடம் கேட்க, நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிக்கிறோம்.
என் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது, வேறு திருமணத்தை பற்றி நீங்கள் எதுவும் பேசவேண்டாம் என அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதையடுத்து மகளை பார்க்க விரும்பாத பெற்றோர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி நிலையில் மகளை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்கள்.