அமெரிக்க கடற்படையின் இராட்சத கப்பலான யுஎஸ்என்எஸ் லூவிஸ் அன் கிளார்க் திருகோணமலைத் துறைமுகத்தில்.

அமெரிக்க கடற்படையின் இராட்சத கப்பலான யுஎஸ்என்எஸ் லூவிஸ் அன் கிளார்க் இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

worlds_biggest_ship_640_01

அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் இன்று தொடக்கம் எதிர்வரும் 6ஆம் நாள் வரை நடைபெறவுள்ள கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்கவே, இந்த இராட்சத கப்பல் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

210 மீற்றர் நீளமும், 32 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் இரண்டு உலங்குவானூர்திகளைத் தரையிறக்கும் வசதிகளும் உள்ளன.

எதிர்வரும் 6ஆம் நாள் வரை இந்தக் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும்.