பிரான்சின், ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின், ஏ – 380 என்ற விமானத்திற்கு நடந்தது என்ன ?

ஐரோப்பிய நாடான பிரான்சின், ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின், ஏ – 380 என்ற மிகப் பெரிய இரண்டடுக்கு விமானத்தின் இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்த, 520 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

பல அடி உயரத்தில் இருந்து திடீரென வேகமாக தரையிறங்கிய விமானம்: நடந்து என்ன?

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டின், ஏர் – பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, ஏ – 380 என்ற மிகப் பெரிய இரண்டடுக்கு விமானம், பாரிசில் இருந்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சுக்கு, நேற்று முன்தினம் புறப்பட்டது.

பல மணி நேர பயணத்துக்கு பின், விமானத்தில் மிகப் பெரிய அளவுக்கு சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பல அடி உயரத்தில் இருந்து, திடீரென வேகமாக, விமானம் கீழே இறங்கியது.

இதனால், பயணியர் அச்சமடைந்து கூச்சலிட்டனர்.

பல அடி உயரத்தில் இருந்து திடீரென வேகமாக தரையிறங்கிய விமானம்: நடந்து என்ன?

சோதித்து பார்க்கையில், விமானத்தின் ஒரு இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதுடன், விமானத்தின் வெளிப்புற பகுதியும் சேதமடைந்திருந்தது.

உடனடியாக, கனடாவில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த, 24 ஊழியர்கள், உட்பட, 520 பேர், எவ்வித காயமுமின்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.