ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விரிவாக்குவதனை அடிப்படையாகக்கொண்டு அக்கட்சி எதிர்வரும் 30 அம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை யாழ். மாவட்டத்தில் பரந்துபட்ட அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தலைமையில் நடைபெறவுள்ள அக்கூட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தற்போது யாழ்ப்பாணத்தில் மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது
மேலும் எதிர்வரும் தேர்தல்களில் யாழ். மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் களமிறக்கவுள்ள வேட்பாளர் தெரிவின் பெரும்பகுதி தற்போதைக்கு நிறைவடைந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன