இனி ஆதார் கார்டு இல்லாமல் பட்டாசு வாங்க முடியாது!!

தற்சமயம் ஜிஎஸ்டி அமுலுக்கு வந்துள்ளதால் பட்டாசு தயாரிப்பாளர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் இருந்து வியாபாரிகள் வாங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில் அவர்களிடம் ஜிஎஸ்டி எண் இருக்கும். ஆனால் தனிநபர்கள் வாங்குவதாக இருந்தால், அவர்கள் ஆதார் அடையாள அட்டையின் நகல், பான் கார்டு நகல் உள்ளிட்டவற்றை ஆர்டர் தரும்போது அதனுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

1920_1200_20100420013009721422

சில ஆண்டுகளாக இணைய வழியில் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதால், பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களும் இணையதளம் மூலம் விற்பனையைத் தொடங்கியுள்ளன. வீட்டுக்கே பட்டாசு தேடிச்சென்று விடுவதால் இதற்கு வாடிக்கையாளர்கள் பெருகி வருகின்றனர் என இணைய வழி பட்டாசு விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.