மூன்று நாட்கள் குகைக்குள் தனிமையில் இருந்த மாணவன்

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் , ஒரு குழுவாக வெளிப் பயணம் செய்தபோது , அநாதரவாக விடப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் தெற்கு இன்டியானா மாவட்டத்தில் சம்பவித்துள்ளது . 19 வயதான லூக்காஸ் கவர் என்பவர் இன்று ஞாயிறன்று , இங்குள்ள ஒரு குகைக்குள் சென்ற சமயம் தன் குழுவினரைத் தவறவிட்டுள்ளார் .  இவர் உள்ளே நிற்பதை அறியாது நுழைவாயிலை அடைத்துவிட்டு ஏனைய மாணவர்கள் சென்றுள்ளார்கள்.

மூன்று நாட்களை தனியனாக குகைக்குள் கழித்த மாணவன்

இவர் குகைக்குள் அடைபட்டிருந்த சமயம் , மனம் குழம்பி , மிகவும் பயந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்ததாக இன்டியானா பத்திரிகைப் பேட்டியொன்றில்  இந்த மாணவர்  கூறி இருக்கிறார் .. பின்பு தன்னைச் சுதாரித்துக் கொண்டு , வெளியே செல்லும்வரை எப்படி நேரத்தை கழிக்கலாம் என்று  திட்டமிட்டுள்ளார் . தன் உடலின் நீர்த்தன்மை அற்றுப் போகாதிருக்க குகையின் உட்புற சுவர்ப் பகுதியை நாக்கால் நக்கி நீர்த்தன்மை கொண்டுவர முயற்சித்துள்ளார் .

மூன்று நாட்களை தனியனாக குகைக்குள் கழித்த மாணவன்

தனது அலைபேசியில் பெற்றோருக்கு அடிக்கடி குட்பை குறும் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்துள்ளார் , இறுதியில் இவர் திரும்பி வராதது அறிந்து , இவர் குழுவின் தலைவர் , குகைக்கு திரும்பி வந்து , மாணவனை அழைத்துச் சென்றுள்ளார் . ஏறத்தாழ மூன்று நாட்களை இந்த மாணவன் இங்கே தனியனாகக் கழித்தது குறிப்பிடத்தக்கது