அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஐநா சபை முன்பு போராட்டம்

+2வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வின் தகுதி அடிப்படையில் மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்காததால், மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். இதன் காரணமாக உலகத்தில் உள்ள பல்வேறு தமிழர்களும் கொதித்தெழுந்துள்ளனர்.

xzsc

இந்நிலையில் நியூயார்க்கில் ஐநா பொதுசபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உரையாற்றிய நேரத்தில், அரங்கத்திற்கு வெளிப்பகுதியில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க வாழ் தமிழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்ககோரி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தினர். அப்போது மத்திய அரசால் தமிழர்கள் நசுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள் இது விவாதிக்கப்பட வேண்டிய காலம் எனவும் கூறினர்.