ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை

இந்தியாவின் விருத்தாசலம் அருகே ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் 15 வயதுடைய அமராவதி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை – அதிர்ச்சியில் பெற்றோர்

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த குறித்த மாணவி முதனை பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டநிலையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அந்த மாணவியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தனது மகள் கணித பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக பள்ளி ஆசிரியை திட்டி கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் வீட்டில் யாருடனும் பேசாமல் சோகமாகவே காணப்பட்டாள். மனமுடைந்த அவள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தார்.இதைத்தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.