குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி !!

குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ekfnjk

சர்வதேச அளவில் மகத்தான சாதனை படைத்த நபர்களுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்குவது வழக்கம்

இதே போல், மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சாதனைகளை செய்யும் நபர்களுக்கு Ig Nobel என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குறட்டை விடுவதை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஐ.ஜி நோபல் விருது வழங்கப்பட்டது.

விருதை வாங்கிய குழுவில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Milo Puhan என்பவரும் இடம்பெற்றுள்ளார்.

குறட்டை விடுவதை தடுக்க பெரிய அளவிலான புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கருவியை இசைப்பதன் மூலம் குறட்டையை தடுக்க முடியும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்புல்லாங்குழலை அவுஸ்ரேலியாவில் didgeridoo என அழைக்கின்றனர்.கடந்த 2005-ம் ஆண்டு முதல் இக்கருவி மூலம் குறட்டையை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 25 பேர் உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பாதி பேர் இக்கருவியை தொடர்ந்து இசைத்து வந்துள்ளனர்.

எஞ்சியவர்கள் கருவியை பயன்படுத்தவில்லை. ஆய்விற்கு பின்னர், கருவியை வாசித்த நபர்களுக்கு குறட்டை விடுவது தடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு குறட்டை வருவதற்கு முக்கிய காரணமாக வாயின் உட்புறமாக உள்ள மேல் தசை அமைந்துள்ளது. இந்த தசை மென்மையாக உள்ளதால் எளிதில் குறட்டை உருவாகிறது.

ஆனால், மேலே கூறிய கருவியை தொடர்ந்து இசைப்பதால் வாயில் உள்ள மேல் தசை இறுக்கமாக வலிமை அடைவதால் குறட்டை உருவாவது தடுக்கப்படுகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.