ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இயக்குனர் ஆடம் அப்தெல் மெளலாவுடன் வைகோ முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இதன்போது ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.வின் விசேட அதிகாரிக்கு பல விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய நிலையில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் துயர் தொடர்பாக வைகோ நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார். வைகோவின் இந்த கருத்துக்களை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இயக்குனர் ஆடம் அப்தெல் மெளலா மிகவும் கரிசனையோடு செவிமடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







