புலம்பெயர் தமிழ் மக்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் – ஜனநாயக போராளிகள் !

தாயகத்தில் நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை புலம்பெயர் தமிழ் மக்களை நாட்டுக்கு திருப்பி  அனுப்ப வேண்டாம் என சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதரக உயர் அதிகாரிகளிடம் ஜனநாயக போராளிகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலம்பெயர் தமிழ் மக்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் - ஜனநாயக போராளிகள் !

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதரக உயர் அதிகாரிகளின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்குமான கலந்துரையால் ஒன்று திருகோணமலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில்  தற்போதைய ஜனநாயகபோராளிகளது செயற்பாடுகள், சமகால தமிழர் தரப்பு அரசியல் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

புலம்பெயர் தமிழ் மக்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் - ஜனநாயக போராளிகள் !

குறிப்பாக தீர்வுக்கான முனைப்புகள் , சமாதான சகவாழ்வியல் தொடர்பில் நிலையான நிரந்தரமான முடிவுகள் ஏற்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்தவர்கள் மீள்திரும்புகை நிறுத்தப்படவேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களில் தாயக  சமூகபொருளாதார அபிவிருத்தியில் அவர்களது நாடு தொடர்ந்து பயணிக்கவேண்டுமெனவும் அவர்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.