13 வயது சிறுமியை எரித்துகொன்ற பெற்றோர்

13 வயது சிறுமியை அவரது பெற்றோர்களே எரித்து கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ஆண் நண்பர்களுடன் அதிகம் பழகியதால் 13 வயது சிறுமியை அவர்களது பெற்றோர்களே எரித்துக் கொலை செய்துள்ளனர்.

13 வயது சிறுமியை எரித்துகொன்ற பெற்றோர்:விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

தெலங்கானா மாநிலம் நல்கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சிறுமியைக் காணவில்லை என்ற புகாரை அடுத்து பொலீசார் தேடியதில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

13 வயது சிறுமியை எரித்துகொன்ற பெற்றோர்:விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

அதாவது அந்த 13 வயது சிறுமி அவளது ஆண் ஆசிரியர் மற்றும் அவருடன் படிக்கும் வகுப்பு நண்பர்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளாள்.

இதை அறிந்து கொண்ட அவளது பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர்.

13 வயது சிறுமியை எரித்துகொன்ற பெற்றோர்:விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

ஆனால், அந்த சிறுமி மீண்டும் தனது நண்பர்களுடன் பழகியதால், ஆத்திரமடைந்த பெற்றோர் அவளை எரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பொலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக பொலீசார் விசாரித்த போது அந்தச் சிறுமி தற்கொலைக்கு முயன்றாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.