ஆந்திர மாநிலத்தில் திருமணம் முடிந்த அன்றே காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த பட்டுல்லா சந்தீப் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போகிரெட்டி மவுனிகா என்கிற மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில், இருவரின் சடலங்களும் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் விஜயவாடாவில் நேற்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
ஆனால் அன்று இரவே அவர்கள் தற்கொலை செய்துகொள்ள போவதாக நண்பர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளனர். அதன்படி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அந்த காதலரகள் இருவரும் பெற்றோர்களுக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.