லண்டன் நிலக்கீழ் ரயில் தாக்குதல் சந்தேக நபரின் புகைப்படம் வெளியானது

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலைய சந்தேக நபர் ஒருவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

mncvk

பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் யாஹியா ஃபரூக்கின் புகைப்படங்களே தற்போது வெளியாகி உள்ளன.

21 வயதான யாஹியா ஃபரூக், ஸ்ரான்வெல், சரேயில் தங்கியிருந்துள்ளார். சனிக்கிழமை இரவு குறித்த சந்தேக நபரை பொலிசார் ஹவுன்சிலோவில் கைது செய்தனர். மற்ற சந்தேக நபரை பொலிசார் டோவரில் கைது செய்தார்கள். அவருக்கு வயது 18 ஆகும்.

கடந்த வெள்ளியன்று டிஸ்க்றிக் லைன் நிலக்கீழ் ரயிலில் வெடித்த குண்டை அங்கு கொண்டு சென்று வைத்தவர் குறித்த இந்த சந்தேக நபரே என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் குண்டு வெடிப்பு: சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணை லண்டனில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறியரக குண்டொன்று வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.


இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், 18 மற்றும் 21 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவரை நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர்.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தச் சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

டோவர் துறைமுகப் பகுதியில் 18 வயதுடைய சந்தேக நபரை முதலில் பொலிஸார் கைதுசெய்தனர்.