இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார்

இலங்கை சென்ற வெளிநாட்டவர் ஒருவருக்கு திகில் நிறைந்த அனுபவம் கிடைத்துள்ளது.

aa1

வீதியில் சென்ற யானை ஒன்றுக்கு உணவளிக்க சென்ற ஐரிஷ் நாட்டவர் ஒருவருக்கே இந்த திகில் அனுபவம் ஏற்பட்டுள்ளது.

யால தேசிய பூங்காவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டியில் பயணித்த ஐரிஷ் நாட்டவர் யானை வருவதனை அவதானித்து அதற்கு உணவளிப்பதற்காக முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார்.

அதற்கமைய அவர் உணவை வழங்குவதற்காக முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி யானைக்கு அருகில் சென்று உணவு வழங்கியுள்ளார்.

இதன் போது கோபமடைந்த யானை ஐரிஷ் நாட்டவரை தாக்கியுள்ளதுடன் அவர் பயணித்த முச்சக்கர வண்டியை தலைகீழான புரட்டியுள்ளது. எனினும் குறித்த நபர் ஆபத்தின்றி தப்பியுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டிக்கு பின்னால் வந்த வெளிநாட்டவர்கள் குழு ஒன்று சம்பவத்தை காணொளியாக பதிவிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த காணொளியை பார்வையிட்டவர்கள் குறித்த ஐரிஷ் நாட்டவர் இன்னும் உயிருடன் இருப்பது குறித்து ஆச்சரியமடைந்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கையின் யானையின் தாக்கம் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது