நடுக்கடலில் சிக்கிய சூர்யா !

நடிகர் சூர்யா நடிப்பு, அகரம் என மிகவும் பிசியாக இருக்கிறார். இவரின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் ரிலீஸ் இன்று ஆனது. நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

surya

தற்போது அவர் அமெரிக்காவின் பல பகுதிகளில் அகரம் ஃபவுண்டேசனுக்காக நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு அவர் பலருக்கு கல்விக்கரம் நீட்ட காத்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று அவர் சியாட்டல் நகருக்கு வருவதற்கு முன் பசிபிக்கடலில் படகில் பயணம் செய்துள்ளார். அந்த அதிவேக படகு திடீரென பாதி வழியில் நின்றது. இதனால் உடனே அந்நகர போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சூர்யாவை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.