இங்கிலாந்து மருத்துவக் கவுன்சிலின் கறுப்புப் பட்டியலில் சைட்டம்

இங்கிலாந்து மருத்துவக் கவுன்சிலின் கறுப்புப் பட்டியலில் மாலபே தனியார் மருத்துப் பல்கலைக்கழகம் (சைட்டம்) உள்ளடக்கப்பட்டுள்ளது.

SAITM (1)

இங்கிலாந்து மருத்துவ கவுன்சிலினால் அங்கீகரிக்கப்படாத மருத்துவப் பட்டப்படிப்பு வழங்கும் உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பட்டியலை வருடாந்தம் அக்கவுன்சில் வௌியிட்டு வருகின்றது.

குறித்த பட்டியலில் இந்த வருடம் மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் (சைட்டம்) உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சைட்டம் மருத்துவப் பட்டப்படிப்பு இங்கிலாந்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அதன் காரணமாக சைட்டம் மருத்துவப் பட்டதாரிகள் இங்கிலாந்தில் மருத்துவத் துறை உயர்கல்வியைத் தொடரவோ, இங்கிலாந்தில் மருத்துவர்களாக பதிவு செய்துகொண்டு தொழில்களில் ஈடுபடவோ முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.