மீண்டும் மோசடி வழக்கில் சிக்கிய மஹிந்த குடும்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

president-1

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கல்கிஸ்ஸை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடுகளை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக, அவர் இன்று (வியாழக்கிழமை) நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக அவரை கடந்த 12ஆம் திகதி ஆஜராகுமாறு நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் உத்தரவிட்டிருந்த போதிலும், அன்றைய தினம் ஆஜராக முடியாதென யோஷித தமது சட்டத்தரணி மூலம் அறிவித்திருந்தார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டில் யோஷிதவும் சிக்கியுள்ள நிலையில், அவருக்கெதிராக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.