சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் பதவியைப் மீளப் பெற வேண்டும் !!

இலங்கை இராணுவத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா பல்வேறு விதத்தில் அழுத்தங்களை வழங்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

sarath-ponseka2

சில அதிகாரிகளுக்கு எதிராக இராணுவத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பிலும் அழுத்தங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் அவரினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக இராணுவ வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.

இதனால், பீல்ட் மார்ஷல் எனும் தனது உயர் பட்டத்தை சரத்பொன்சேகா துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் பதவியைப் மீளப் பெறல் வேண்டும் என தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.