நாங்க‌ள் இப்போது போராட‌ வேண்டிய‌து பெரும்பான்மை சமுதாயத்தினரிடம் இல்லை

நாங்க‌ள் இப்போது போராட‌ வேண்டிய‌து பெரும்பான்மை சமுதாயத்தினரிடம் இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வட மாகாண ஒருங்கிணைப்பாளரும், வவுனியா மாவட்ட இணைப்பாளருமான பொன்னுத்துரை அரவிந்தன் குறிப்பிட்டுள்ளார்.

cmnvm

எனினும், எம்மை விட‌ எண்ணிக்கை ம‌ட்டத்தில் குறைவாக‌ உள்ள‌ சிறுபான்மை சமுதாயத்தினரிடமே போராட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதில் மேலும், உண்மையிலேயே எமது சமுதாயம் தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது எல்லா வகையிலும். முதலில் அபிவிருத்தி, கல்வி மற்றும் கலாச்சாரம் போன்றவற்றில் பாரிய பின்னடைவில் உள்ளனர்.

கடந்தகால கொடிய யுத்தத்தின் போது எமது சமுதாயம் மிகவும் கஸ்டத்தை அனுபவித்தனர். அன்றைய நாள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். யுத்தத்தின் இறுதிக்கட்ட நாட்களில் பொதுமக்கள் தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு பாரிய முயற்சியிலும் போராட்டத்திலும் இருந்தனர்.

அதில் ஒரு சிலர் விட்டு வெளியேறினர். ஆனால் இன்று சிறுபான்மை சமுதாயத்தினரின் அபிவிருத்திகளும் கல்வி, கலாச்சாரம் போன்ற விடயங்களில் பின்தங்கியே காணப்படுகின்றனர்.

நாங்க‌ள் இப்போது போராட‌ வேண்டிய‌து பெரும்பான்மை சமுதாயத்தினரிடம் இல்லை. எம்மை விட‌ எண்ணிக்கை ம‌ட்டத்தில் குறைவாக‌ உள்ள‌ சிறுபான்மை சமுதாயத்தினரிடம். காரணம் இல‌ங்கையில் இன்னும் 5 ஆண்டுக‌ளில் த‌மிழ‌ர் தான் மிக‌ச் சிறுபான்மை இன‌மாக‌ மாற‌ வாய்ப்புள்ள‌து.

ஆக‌வே வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு மாகாண‌த்தில் அவ‌ச‌ர‌மாக‌ த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கையை பெருக்க‌ வேண்டும். ஒன்று இந்தியாவில் உள்ள‌ அக‌திக‌ளை இல‌ங்கைக்கு கொண்டு வ‌ருத‌ல். இரண்டு உல‌க‌ நாடுகளில் அரசியல் த‌ஞ்ச‌ம் புகுந்து உள்ள‌வ‌ர்க‌ளை வ‌ரும்ப‌டி கேட்ட‌ல். ஆனால் இது இர‌ண்டும் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை. ஆக‌வே எம‌து அடுத்த‌ திட்ட‌ம் மொன‌ராக‌லை, மாத்த‌ளை, ப‌துளை, காலி ஆகிய‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ எம‌து த‌மிழ் உற‌வுக‌ளை வ‌ட‌க்கு, கிழ‌க்கில் குடி அம‌ர்த்துவ‌த‌ன் மூல‌ம் எம‌து ப‌ல‌த்தை சிறுபான்மையிட‌ம் இருந்து காக்க‌ முடியும் என தெரிவித்துள்ளார்.