சார்ஜாவிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த குடியிருப்பில் இருந்த இரு ஆண்கள், பெண்கள் மூவர் தற்கொலை செய்ய முற்பட்டதாகவும் அதில் இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ம் திகதி இடம்பெற்ற குறித்த குறித்த சம்பவத்தில் 55 வயதான தந்தை, 54 வயதான தாய் மற்றும் அவர்களது 19 வயதான மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது உறவினர்களாக கருதப்படும் இரு பெண்களே காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ததாக அயலவர்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலினை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் வீடு உட்பக்கம் பூட்டப்பட்டிருந்ததனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, மூன்று பெண்கள் தங்களது மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாகவும் அருகில் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளை துணியால் மூடப்பட்டு காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அங்கு ; பல வித்தியாசமான மருந்துகள், சிவப்பு நிற நீர் அடங்கிய கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களும் இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சம்பத்தில் பலியான இளைஞர் முதலில் தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அதனையடுத்து மூன்று பெண்களும் தற்கொலைக்கு முயன்றுள்ளதோடு, இறுதியாக ஆண் மாடியில் இருந்து குதித்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.







