முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்குவது எப்படி?

சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு மேடு பள்ளங்களாக இருக்கும். அவை உங்கள் முகத்தின் அழகையே கெடுக்கும். இப்படி மேடு பள்ளங்கள் ஏற்படுவதற்கு காரணம், சருமத் துளைகளானது விரிந்து கொண்டே போவதோடு, அவ்விடத்தில் அழுக்குகளும், எண்ணெய்களும் அதிகம் சேர்ந்து, மேன்மேலும் பெரிதாகிக் கொண்டே இருக்கும்.

சரி, உங்கள் முகத்தில் மேடு பள்ளங்கள் உள்ளதா? அவற்றை எப்படி போக்குவது என்று தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்குவதற்கு செய்ய வேண்டியவை கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றி வந்தால், விரைவில் அதனை மறைக்கலாம்.

படி #1


சருமத்தை சுத்தப்படுத்த ஓர் சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. ஆவி பிடிப்பதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியே வந்துவிடும். பின் சுத்தமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

படி #2

ஆவி பிடித்த பின், ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் வெளியே வந்த அழுக்குகளை தேய்த்து முற்றிலும் வெளியேற்றிவிடலாம். அதற்கு உப்பை நீரில் கலந்து அதனைக் கொண்டு மென்மையாக ஸ்கரப் செய்யலாம்.

படி #3

ஸ்கரப் செய்ததை அடுத்து, திறந்துள்ள சருமத்துளைகளை மூட வேண்டும். அதற்கு ஐஸ் கட்டிகளைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் திறந்த சருமத்துளைகளை மூடிவிடும்.

படி #4

ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து, முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்யவும்.

டிப்ஸ் #1

இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவுங்கள். முக்கியமாக மேக்கப் போட்டிருந்தால், இரவில் படுக்கும் முன் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி துடைத்து எடுத்துவிடுங்கள். ஒருவேளை நீங்கள் மேக்கப் பயன்படுத்தாவிட்டால், முகத்தை நீரினால் ஒருமுறை கழுவுங்கள். இதனால் சருமத் துளைகளில் அழுக்குகள் சேர்வதைத் தவிர்க்கலாம்.

டிப்ஸ் #2

சருமத்திற்கு பொருத்ததாத அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால் அவை உங்கள் சருமத் துளைகளை மேலும் பெரிதாக்கிவிடும். உங்களுக்கு வேறு ஏதேனும் டிப்ஸ் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.