தந்தையை அடித்து கொலை செய்த கொடூர மகன்

தனது தந்தையை கொலை செய்த மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

JKFVJKF

ஹக்மிமன, மாவில பிரதேசத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான மகன் தந்தையின் தலையில் இரும்பு கம்பியினால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த தந்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தந்தை 75 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

கைது செய்யப்பட்ட 44 வயதுடைய மகன் காலி நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.