அம்மாவின் ஆன்மாவோடு பேசிய நீங்கள் அனிதாவோட பேசுங்கள் – சீமான் ஆவேசம்

அனிதாவின் மரணத்துக்காக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

SN

அந்தவகையில் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், ஆளுங்கட்சியின் மீது கோபமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அனிதாவின் மரணத்துக்கு காரணம் மாணவர்களுக்கு ஆளுங்கட்சி கொடுத்த தவறான நம்பிக்கை தான். மற்ற மாநில பணக்கார மாணவர்கள் தமிழ்நாட்டில் வாழ்வதாக போலி இருப்பிடச்சான்றிதழ் கொடுத்து எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காத மருத்துவ சீட்டை பெறுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

பதவிக்காக அம்மாவின் ஆன்மாவுடன் பேசும் அரசியல்வாதிகள் அனிதாவின் ஆன்மாவுடன் பேசுங்கள்.