புலிகளின் முக்கியஸ்தர் விநாயகம் மற்றும் பலர் உள்ள இடத்தை கண்டு பிடித்த அமைச்சர் சம்பிக்க

தமிழீழ வீடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, அவர்களை தண்டிக்க வேண்டிய நிலை ஏற்படுமென மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

va

தேசிய பாதுகாப்பினை நிலைநாட்டுவதற்காக செயற்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டு சுமத்தப்படுமாயின், வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராகவும் சர்வதேச சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க ”தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட முக்கிஸ்தர்களான ருத்ரகுமார் அமெரிக்காவில் இருக்கின்றார். அதேபோல் அடெல் பாலசிங்கம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்.

பிரான்சில் விநாயகம் இருக்கின்றார். நோர்வேயில் நெடியவன் இருக்கின்றார். ஆகவே எமக்கு இவ்வாறு நெருக்கடியை கொடுத்து எமது இராணுவத்தை கைது செய்ய நடவடிக்கை எடுப்பார்களாயின்.

இஸ்ரேலைப் போன்று எமது அரசாங்கமும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக சர்வதேச சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

அதனைவிட 12,000 முன்னாள் புலி உறுப்பினர்களை முன்னாள் ஜனாதிபதி விடுதலை செய்தார். இவ்வாறு எமது இராணுவத்திற்கு எதிராக சதிகள் அரங்ககேற்றேப்படுமாயின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆகவே நாட்டு இராணுவத்திற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த, பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் முன்னாள் புலி உறுப்பினர்களும் தண்டிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் உருவாகும்.”

இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க ”முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் தலையிட வேண்டும். அவர் வன்னியின் கட்டளைத் தளபதியாக தனது கடமையையே நிறைவுசெய்தார்.

அது அவரது தனிப்பட்ட தேவையல்ல. ஆகவே தனது பணியாளர் ஒருவர் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் இருந்த தீவிரவாதத்தை சட்டத்திற்கு உட்பட்டு எமது இராணுவம் இல்லாதொழித்தது.

ஆகவே ஜெகத் ஜயசூரியவின் பணிகளும் சட்டத்திற்கு உட்பட்டே இருந்தன. அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவே செயற்பட்டார். ஆகவே அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் தலையிட வேண்டும்.”