கொழும்பில் பொலிஸ் சேவையை இரண்டாக பிரிக்க நடவடிக்கை

கொழும்பு பொலிஸ் சேவையை, நகர பொலிஸ் மற்றும் மேல் மாகாண பொலிஸ் என இரண்டாக பிரிக்குமாறு புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான உப குழு யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

image_1493392716-a0b537edef

மேல் மாகாண பொலிஸ் கொழும்பு நகர பொலிஸ் விடயங்களில் தலையிட முடியாது. இந்த பரிந்துரை காரணமாக பொலிஸ் திணைக்களத்தின் கொழும்பிற்கான நடவடிக்கைகள் இரண்டாக பிரிக்கப்படும்.

பொலிஸ் துறையின் வரலாற்றில் கொழும்பு நகருக்கு தனியான பொலிஸ் பிரிவும் மேல் மாகாணத்திற்கு தனியான பொலிஸ் பிரிவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

மேல் மாகாண பொலிஸ் விசேட ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கும் வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளில் தலைநகரங்களுக்கு தனியான பொலிஸ் பிரிவுகள் இருக்கின்றன. அத்துடன் மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கான தனியான பொலிஸ் திணைக்களங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.