வித்தியா படுகொலை விவகாரம்: விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு சென்ற மகஜர்

மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சு, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஒப்புதல் வழங்குகின்றதா, என்ற கேள்வியுடன் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

images (30)

துறைசார் மற்றும் புத்திஜீவிகள் பெண்களுக்கான அமைப்பே குறித்த மகஜரினை கையளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் eாம் அதிகம் கரிசனை கொள்கிறோம்.

பெண்களுக்கான பால் சமநிலைத்துவம் பேணப்படுவதன் மூலம் பெண்கள் மீதான வன்முறைகள் , பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் உட்பட சட்டங்களை வலுவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்ப் அதிக சிரத்தை கொள்கிறோம்.

சட்டம் மற்றும் இயற்கை நீதிகளுக்கு அமைவாக, வித்தியா படுகொலைக்கு நியாயம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை, வித்தியா படுகொலை வழக்கின் 9 ஆம் இலக்க சந்தேகநபரான சுவிஸ் குமாரை காப்பாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்பு தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதிகாரப்போர்வை மற்றும் சந்தர்ப்பவாதத்துவம் வித்தியாவிற்கான நீதியைப் புறந்தள்ளும் வாய்ப்புள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.